(UTV | கொழும்பு) – இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் சராசரியாக 75% மின் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, 0 முதல் 30 யூனிட் வரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 198 ரூபாயும், 31 முதல் 60 யூனிட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 599 ரூபாயும் உயர்த்தப்படும்.
மேலும், 61 முதல் 90 யூனிட் பயன்படுத்துவோரின் மின் கட்டணம் 1,461 ரூபாயும், 91 முதல் 120 யூனிட் பயன்படுத்தும் மக்களின் மின் கட்டணம் 2,976 ரூபாயும் உயரும்.
121 முதல் 180 அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்தில் 5,005 ரூபா அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.