உள்நாடு

அநுர தரப்பு இன்றைய சந்திப்பில் பங்கு கொள்ளாது

(UTV | கொழும்பு) – சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எனினும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

முன்னதாக ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் போதிலும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சி ஆதரவளிக்காது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை எண் அறிமுகம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

சிறீதரன் மனோ ஒன்றாக : இராதா, பழனி வேறு பக்கம்!