கிசு கிசு

கோட்டாபய தற்போது நாடு திரும்புவது பொருத்தமானதல்ல

(UTV | கொழும்பு) – இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிங்கப்பூரில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டில் தங்குவதற்கு விசா கிடைத்துள்ளதால், அதற்கு முன்னர் இலங்கைக்கு வருவாரா அல்லது அன்றைய தினம் வருவாரா என வினவிய போது, ​​அதற்கு உறுதியாக பதிலளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட வீசா காலத்திற்கும் மேலாக சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் அந்நாட்டில் பாதுகாப்பு பிரச்சினையும் எழுந்துள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் தமக்கு தெரிவித்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது ஏற்புடையதல்ல என்றும் ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

Related posts

கரப்பான்பூச்சிகள் வாழ தன் காதையே கொடுத்த இளைஞன்?

ரஞ்சனுக்கு ஜம்பர்.. வெளி உணவுக்கு தடை.. வெளியாட்களை பார்க்க தடை

கொரோனா : அதிக ஆபத்தான பிரதேசங்கள் அரசினால் அறிவிப்பு