உள்நாடு

‘நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மிகவும் முக்கிய காரணங்களில் ஒன்றுதான் இனவாதம்’

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் பொதுவான இலக்காகும் எனவும், அதற்காக தமது தனிப்பட்ட இலாப எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் எனவும், இது வெறும் பதவிப் பரிமாற்றமாக இருக்காது,குழு அமைப்பு மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் முனைப்பாக பங்களிப்பை வழங்கக்ககூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கட்சியினை சார்ந்த எம் அனைவரதும் நிலைப்பாடாகும்.

தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தற்போது நடைபெற்று வரும் அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், சட்டத்தை மீறி வன்முறையை பரப்பிய நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் சிவில் பொது சமூகத் தலைவர்களை ஒடுக்கி வருவதாகவும், இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜோசப் ஸ்டாலின போன்ரோரின் கைது இத்தருணத்தில், எமது நாடு வீழ்ந்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு மிகவும் பாதகமான தலையீட்டை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் எனவும், தற்சமயம் துறைசார் மேற்பார்வைக் குழு அமைப்புக்கு அப்பாற்பட்ட, புதிய சக்தி வாய்ந்த குழு முறையின் ஊடாக பாராளுமன்றத்தை முனைப்புடனான பொது கூட்டு வேலைத்திட்டத்தின் ஊடாக வழிநடத்த வேண்டும் எனவும் கோரியிருந்தோம்.

மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மிகவும் முக்கிய காரணங்களில் ஒன்றுதான் இனவாதமும் மதவாதமும். இதனை கக்கி ஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த காலங்களில் நாட்டுடைய மக்களுடைய நலன்களை விடவும் இனவாதத்தினை விதைப்பதன் ஊடாக தங்களது அரசியல் பயணத்தினை நிலையாக வைத்துக் கொள்ளலாம் என்று தப்பெண்ணம் கொண்டு செயல்பட்டமைதான் பொருளாதார சீரழிவுக்கு முக்கிய காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டி எதிர்காலத்திலே அவ்வாறு இனவாத சக்திகளின் கைகள் ஓங்காது பாதுகாக்குமாறும் அதில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் நாம் கோரியிருந்தோம்..”

Related posts

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி வெளியானது

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குரிய ஓய்வூதியம்

பாடசாலை கல்விச் சுற்றுலாவிற்கு புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபம்