உள்நாடு

தலதா பெரஹராவை பார்வையிட வந்த குழந்தையை கடத்திய சந்தேகநபர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி ஓடும் ரயிலில் இருந்து 9 வயது சிறுவனை ஏமாற்றி அழைத்துச் சென்ற நபர் மஹரகம ரயில் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு ஓடிக்கொண்டிருந்த புகையிரதத்தில் சந்தேக நபருடன் பயணித்த குழந்தையொன்றை அவதானித்த பயணிகள் அச்சமடைந்து மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.

இந்த குழந்தை தலவத்துஓயா மைலபிட்டிய பிரதேசத்தில் வசிப்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று முன்தினம் கண்டி ஸ்ரீ தலதா பெரஹராவை பார்வையிட வந்த போது பெற்றோரின் அனுமதியின்றி குழந்தையை அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

பொம்மைகளை எடுத்துச் செல்வதற்காக குழந்தையை கொழும்புக்கு அழைத்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தை காணவில்லை என கண்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஹாதியா இன்றும் ஆணைக்குழுவில் ஆஜர்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் தயார்

மேலும் இருவர் குணமடைந்தனர்