(UTV | கொழும்பு) – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் (Mary Lawlor) கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார்.
“இன்று மாலை 6 மணியளவில் பிரபல மனித உரிமைகள் பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்று இலங்கையில் இருந்து குழப்பமான செய்திகளை நான் கேட்கிறேன்,” என்று அவர் நேற்று ட்விட்டர் செய்தியில் கூறினார்.
ஜோசப் போன்ற மனித உரிமைப் பாதுகாவலர்களின் பணி சமீபத்திய வாரங்களில் முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று மேரி லாலர் மேலும் கூறினார்.
மனித உரிமைப் பாதுகாவலர்களின் இத்தகைய செயற்பாடுகள் ஆதரிக்கப்பட வேண்டுமே தவிர தண்டிக்கப்படக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.