(UTV | பார்மிங்ஹம்) – பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
பந்தயத்தை முடிக்க யூபுன் 10.14 வினாடிகள் எடுத்தார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றை யுபுன் அபேகோன் உருவாக்குவார்.
இதேவேளை, F42-44/61-64 வட்டு எறிதல் நிகழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாலித, அந்த நிகழ்வில் இலங்கைக்கான வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.