உள்நாடு

ஜனாதிபதி – கூட்டமைப்பு இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் யோசனை தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார விவகாரங்கள் மற்றும் தமிழ் கைதிகளின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்ததை தாம் அறிந்திருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

Related posts

இன்றைய மின்வெட்டுக்கான அட்டவணை

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு