உலகம்

‘Vogue’ இதழ் அட்டைப் படங்களால் சர்ச்சையில் உக்ரைன் ஜனாதிபதி

(UTV | உக்ரைன்) – ‘வோக்’ இதழின் அட்டைப் படங்களில் உக்ரைன் போர்க் காட்சிகளை உலகிற்கு காண்பிக்கும் வகையில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும், அவரது மனைவியும் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதம் வரவுள்ள வோக் இதழ் நேர்காணலில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலனா நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அதில், தங்களது திருமண வாழ்வுமுதல் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை வரையிலான தகவல்களை உணர்வூப்பூர்வமாக இருவரும் பகிர்ந்துள்ளதாக வோக் இதழ் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கான முன்னோட்ட படங்களை வோக் அதன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

மேலும் இருவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், ஒலனா போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிற்கும் புகைப்படங்களையும் வோக் இதழ் வெளியிட்டுள்ளது.

Related posts

ஜப்பானுக்கு செல்ல இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு தடை

எரிபொருள் இறக்குமதியில் உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ்

மொஸ்கோ அனைத்து வகையான விமான சேவைகளுக்கும் தடை விதிப்பு