(UTV | கொழும்பு) – தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜிவந்த பீரிஸ் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக அவர்களது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எவ்வித நியாயமான அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய பிரதிவாதிகள் தயாராகி வருவதாக அருட்தந்தை ஜிவந்த பீரிஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்மானம் வெளியிடுமாறும் தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறும் மனுவில் அருட்தந்தை மேலும் கோரியுள்ளார்.