உள்நாடு

“இலங்கை மக்களுடன் இந்தியா தொடர்ந்து நிற்கும்”

(UTV | கொழும்பு) – இலங்கை மக்களுடன் இந்தியா தொடர்ந்து நிற்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரிக்கு எழுதிய கடிதத்தில், அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறினார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு உதவிகள் மற்றும் கடன்கள் மூலம் இந்தியா ஆதரவளித்து வருகிறது.

இதற்கிடையில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கடந்த வாரம், இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வளர்ச்சியையும் கவனமாக கண்காணிக்கும் என்று கூறினார்.

அடுத்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன ஆராய்ச்சிக் கப்பல் வரவிருக்கும் கால அட்டவணை தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பல்வேறு தரப்பினரால் கவலைகள் எழுப்பப்பட்ட போதிலும், சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5, முழுமையான மதிப்பீட்டின் பின்னரே ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு

நாடளாவிய ரீதியில் மீளவும் இன்று முதல் ஊரடங்கு அமுலுக்கு

நாட்டிற்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள்