உள்நாடு

‘கோட்டா நாடு திரும்ப இது நல்ல தருணம் அல்ல’ – ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்பினால் அது நாட்டில் மேலும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என தமக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Related posts

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

மஹிந்த- பங்காளிகள் பேச்சு இணக்கப்பாடின்றி நிறைவு