உள்நாடு

மக்களை அமைதிப்படுத்த ஆன்மீக திட்டம் தேவை – மைத்திரி

(UTV | கொழும்பு) –  நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், மக்களிடையே நிலவும் அமைதியின்மையைத் தீர்ப்பதற்கு மதத் தலைவர்களின் தலையீட்டுடனான ஆன்மீக நிகழ்ச்சித் திட்டம் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சிறிசேன நேற்று நிதியமைச்சக வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நிலைமையை சமாளிப்பதற்கு இலங்கைக்கு அனைத்து மதத் தலைவர்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

Related posts

தபால் மூல வாக்களிப்பு – 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு

தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை [UPDATE]