உலகம்

ராகுல் காந்தி கைது

(UTV |  புதுடெல்லி) – பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் புதுடெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அமைச்சகங்கள் அமைந்துள்ள சாலைகளை மறிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

இந்தியா பொலிஸ் நாடாக மாறிவிட்டதாகவும், அதன் ராஜா பிரதமர் நரேந்திர மோடி என்றும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி இணைந்துள்ளார். ராகுல் காந்தியைத் தவிர, கட்சித் தொண்டர்களும் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

Related posts

கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி

பிரேசிலில் ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா

சீனாவின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு