உள்நாடு

கோட்டாபய தலைமறைவாகவில்லை – பந்துல

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை என்றும் தான் அறிந்தவகையில், சிங்கப்பூரில் இருந்து அவர் இலங்கைக்கு திரும்புவாரென அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு மற்றும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அவர் இலங்கை திரும்பவுள்ளதாக வெளியான செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் வினவினார்.

அதற்கு பதலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் பயணத் திட்டம் அல்லது அவர் நாடு திரும்புவதற்கான சரியான திகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Related posts

இதுவரையில் 114 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ்

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரை கைது செய்ய உத்தரவு

இலங்கை சமுத்திர சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் தேவை