உள்நாடு

ஜனாதிபதி விரைவில் சீனா விஜயம்

(UTV | கொழும்பு) – வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் சீனா அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்று நம்புவதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து தேயிலை, மசாலா பொருட்கள், ஆடைகள் மற்றும் இரத்தினக் கற்களை கொள்வனவு செய்வதற்கு சீன நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீன அரசாங்கத்திடம் இலங்கைத் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

சமூகத்தின் நலன்கருதி மு.காவுடன் இணைந்து போட்டியிட்டு ஏமாற்றப்பட்டுள்ளோம் – ரிஷாட் பதியுதீன்

பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை நீடிப்பு

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று