உள்நாடு

QR குறியீடு முறைமை மேலும் தாமதமாகிறது

(UTV | கொழும்பு) – தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR குறியீட்டு முறைமையின் கீழ் இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

முன்னோடித் திட்டமாக இன்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி முன்னோடித் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

QR குறியீட்டு முறையின் கீழ் நாடு முழுவதும் எரிபொருள் வழங்குவதைத் தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இனங்காணப்பட்ட சில பிழைகளைத் தீர்த்து நாடளாவிய ரீதியில் பல அதிகார வரம்புகளின் கீழ் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு

கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் – மகிந்த தேசப்பிரிய.

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு