உள்நாடு

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – தொடரும் எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பல வாரங்களாக மூடப்பட்டிருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (25) திறக்கப்படவுள்ளன.

மேலும், 2022 கல்வியாண்டின் முதல் தவணை செப்டம்பர் 7 வரை நீட்டிக்கப்படும் என்றும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளின் நேரம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

முதலாம் வகுப்பு முதல், 11ம் வகுப்பு வரை, திருத்தப்பட்ட பாடத்திட்டம் வழங்கப்படும், அது தொடர்பான கற்பித்தல் நடவடிக்கைகள் நாளை முதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், முதல் பருவ தேர்வுகள் நடத்தப்படாது.

அதன்படி, நாளை முதல் மறுஅறிவிப்பு வரை திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் மட்டும் பாடசாலைகள் வழக்கமான நேரத்திலும், பாடசாலைகள் நடைபெறாத புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டிலேயே கற்றல் அல்லது ஆன்லைன் கற்பித்தலை மேற்கொள்ளவும் பணிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

முகாம்களில் இருந்த 503 பேர் இன்று வீடு திரும்பினர்

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொரோனாவிலிருந்து 3,100 பேர் குணமடைந்தனர்