(UTV | கொழும்பு) – காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க சக்தியைப் பயன்படுத்தியதில் மிகுந்த கவலை என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு, அவற்றின் செயல்பாடுகள் தடைபடக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
Gravely concerned by use of force to disperse protestors.
Journalists and human rights defenders have a right to monitor demonstrations and their functions should not be impeded. pic.twitter.com/iqcXvzNtEC— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) July 22, 2022