(UTV | இந்தியா) – இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்த தேர்தல் உலக வரலாற்றில் புதிய பக்கம் திரும்பிய தேர்தல். இந்திய ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் பழங்குடியின சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திரௌபதி முர்மு ஆளுங்கட்சியால் முன்னிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை.
இன்று அவர் ஜனாதிபதியானால், பழங்குடியின சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தியாவின் ஜனாதிபதியாகும் முதல் பெண்மணி ஆவார்.
இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. நாட்டின் 15வது குடியரசுத் தலைவர் இன்று தேர்வு செய்யப்படுகிறார். இந்தியாவில் பெயரளவுக்கு ஜனாதிபதி பதவி உள்ளது.