கிசு கிசு

‘நான் மக்களின் நண்பன்’ – ரணில்

(UTV | கொழும்பு) – தான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல என்றும்  மக்களின் நண்பன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில்;

“.. ராஜபக்ஷ எப்படி எனது பழைய நண்பர்களாக இருக்க முடியும்? நான் எப்போதும் அவர்களுக்கு எதிராக இருந்தேன். நீங்கள் இன்று வந்து ராஜபக்ஷ எனது நண்பர்கள் என்று சொன்னீர்கள்.

ஒன்று சொல்கிறேன். பத்திரிக்கையாளராக மாறும்போது ஆழ்ந்து படிக்க வேண்டும். இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள். நான் ராஜபக்ஷவின் நண்பன் அல்ல. நான் மக்களின் நண்பன்…” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

புர்கா, நிகாப் தடையிற்கு அலி சப்ரி ஏன் அவசரப்படுகிறார்? [VIDEO]

வீழ்ந்தவர்களை எழுப்புவதுதான் எமது தேவை

மண்ணை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்?