உள்நாடு

மைத்திரி தலைமையில் SLFP விஷேட மத்திய செயற்குழுக்கூட்டம்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கான அழைப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இடம்பெறவுள்ள பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது செயற்படும் விதம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகியுள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க போவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறி, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் வாக்களிக்கவுள்ளதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக்கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

ஜனாதிபதியின் இலக்கு