உள்நாடு

எரிபொருள் விலையினை மேலும் ரூ.100 குறைக்கலாம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தும் உண்மையான விலைகளின்படி ஒரு லீற்றர் எரிபொருளின் உள்நாட்டு விலையை குறைந்தபட்சம் 100 ரூபாவினால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் ஒழுங்குமுறை முறையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய உலக சந்தை விலையின்படி இலங்கையில் எரிபொருள் விலையை நேற்றிரவு (17) 20 மற்றும் 10 ரூபாவால் குறைத்தமை போதாது, நியாயமான செலவின் அடிப்படையில் எவரும் அறியக்கூடிய எளிமையான முறையில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்பட வேண்டும்.

முறையான எரிபொருள் விலை சூத்திரம் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபை மின்சார உற்பத்திக்கு தேவையற்ற செலவுகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால், வெளிப்படையான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சந்தையில் நிலவும் உண்மையான விலைக்கு ஏற்ப இலங்கையில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை மேலும் குறைய வேண்டும் என ஜனக ரத்நாயக்க கூறியதுடன், உண்மையான எரிபொருள் விலை தொடர்பில் முன்னர் முன்வைக்கப்பட்ட தரவுகள் சரியானவை என நிதி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

இதுவரை 1,076 பேர் கைது

காசா எல்லைகளின் மீதான குண்டுத் தாக்குதல்களை கண்டிக்கிறோம் – . ரணில்விக்ரமசிங்க

ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு[VIDEO]