உலகம்

சீனாவில் கடும் வெப்பம் அலை எச்சரிக்கை

(UTV |  பீஜிங்) – சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன.

இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ம் திகதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின. இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 2வது வாரம் வரை நீடித்திருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

2022ம் ஆண்டுக்கான வெப்ப அலை முன்பே வந்து விட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்புடைய தேசிய வானிலை மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சன் ஷாவோ கூறியுள்ளார். இதனால், வடமேற்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகள் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனா, கடந்த ஜூனில் இருந்து கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது. வடக்கு சீனாவின் ஹெபய் மாகாணத்தில் மொத்தம் 71 தேசிய வானிலை ஆய்வு மையங்களில் வெப்பநிலை சாதனை பதிவை கடந்து உள்ளது. அவற்றில் லிங்ஷூ நகரில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. சீனாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வருகிற 26ந்தேதி வரை கடுமையான வெப்பம் நிலவும். நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31ந்தேதி முதல் ஆகஸ்டு 15ந்தேதி வரை முந்தின ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக வெப்பம் பதிவாகும் என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 

Related posts

பெஞ்​சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கலாம் – அனைத்து விமான சேவைகளும் ரத்து – சென்னை வானிலை ஆய்வு மையம்

editor

கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை உயர்வு

மியன்மார் மக்களுக்கு அமெரிக்கா அடைக்கலம்