உலகம்

ஆபிரிக்காவில் மற்றொரு கொடிய வைரஸ் நோய்

(UTV |  ஆபிரிக்கா) – மற்றொரு கொடிய வைரஸ் நோய் பற்றிய தகவல் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

எபோலாவை உண்டாக்கும் மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 98 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்பர்க் வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட நபரை போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Related posts

சர்ச்சையில் ‘ஜெக் மா’

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் உயிரிழப்பு

மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி