உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கட்சியின் தீர்மானம் இன்று

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்வில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போகிறது என்பதை இன்று (18) உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துடன் தாங்கள் உடன்படுவதாக முன்னதாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் எமக்கு வழங்கிய செவ்வியில், ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்துடன் தாமும் இணைந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வேட்புமனு தாக்கல் நாளை (19) பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (20) இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டது

நாட்டை பொறுப்பேற்க கோட்டாபய அழைத்த போது சஜித் மறுத்தார் – ஜீவன்

editor

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்