(UTV | சவுதி அரேபியா) – உத்தியோகபூர்வ விஜயமாக சவூதி அரேபியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மரணம் குறித்து ஜனாதிபதி இளவரசர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கொலையில் சவுதி அரச குடும்பத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக ஆரம்பம் முதலே அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது.
இதற்கு காரணம் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி சவுதி அரசை கடுமையாக விமர்சித்தமை என்றும் தெரிவிக்கப்படுகிறது.