உள்நாடு

கோட்டாவின் வெளியேற்றம் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் ட்விட்டர் பதிவு

(UTV | கொழும்பு) –  கோட்டாபய ராஜபக்ஷவின் வெளியேற்றத்துடன், இலங்கைப் பிரஜைகள் இனி அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடனும், கூடியளவு கவனம் செலுத்துவதாகவும் ஜூலி சங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related posts

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற உன்னத இலட்சியத்துடன் பயணிப்போம்

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

பிரதமரின் அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்க வேண்டும்