(UTV | கொழும்பு) – அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளிலிருந்து தபால் பொதிகளை ஏற்றுக் கொள்வது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து தபால் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுபாடு காரணமாக உள்ளக தபால் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.