உள்நாடு

பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் முன்மொழியப்பட்டது – தயாசிறி

(UTV | கொழும்பு) –   மாற்று அரசாங்கமாக எதிர்க்கட்சித் தலைவர் கருதப்படுவதால் அடுத்த சில மாதங்களில் பிரதமர் பதவிக்கான அதிகாரத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதே பொருத்தமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாட்டின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாகவும், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியே மாற்று அரசாங்கமாக கருதப்படுவதால், நாட்டை நடத்துவதற்கு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

தனி நபராக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர்தான் அடுத்த பிரதமராக வேண்டும் என்றார்.

கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க பல எதிர்க்கட்சிகள் உடன்பாடு எட்டியுள்ளன எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

விசேட வைத்திய பரிசோதனைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம்

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் நிந்தவூர் பகுதியில் கைது

editor

ஜனாதிபதி மாறினாலும், அரசாங்கம் மாறினாலும் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாடு கண்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor