வகைப்படுத்தப்படாத

இந்தியப் பிரதமர் தமிழில் உரையாற்றி தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி பெருபான்மை மக்கள மத்தியிலும் இடம்பிடித்தார்

(UDHAYAM, COLOMBO) – ஜ.நா வெசாக் தின கலந்துகொண்ட இந்தியப்  பிரதமர்; நNரெந்திர மோடி டிக்கோயாவில்   உரையாற்றிய போது  சகோதர, சகோதரிகளே வணக்கம். உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரம் சிங் மற்றும் நண்பர்களே இன்று உங்களுடன் கலந்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழ் மொழியில் குறிப்பிட்டார்.

புpரதமர் மோடியின் அந்த தமிழ்மொழி உரை இந்திய வம்சாவளி மக்களை மாத்திரமின்றி தமிழ் மொழி அறிந்த பெருhhன்மை மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்தியப் பிரதமர் தமிழின் பெருமை பற்றியும், இந்து சமயம் பற்றியும், இலக்கியக்கதைகள், பாடல்கள் மற்றும் திருக்குறள் என அனைத்தும் தமிழில் மேற்கோள்காட்டி பேசியமை மலையக மக்களிடத்தில் மாத்திரமின்றி பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

உங்களுடைய இதயம் கனிந்த உற்சாகமான இந்த வரவேற்பிற்கு நன்றி பாராட்ட கடமை பட்டு உள்ளேன். இந்த அழகிய பிரதேசத்திறிகு வருகை தரும் முதலாவது இந்திய பிரதமர் என்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். உங்களுடன் பேசுவதற்கு கிடைத்த இந்த வாய்ப்பை அதைவிட பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.

உலக புகழ்பெற்ற இலங்கை தேயிலை இந்த வளமிக்க மலையகத்தில் விளைகிறது. ஆனால் இந்த இலங்கை தேயிலை பல உலக மக்களின் தேர்வாக அமைய காரணம் உங்களின் வேர்வையும் உழைப்பும் என்பது பலரும் அறிந்திராத ஒன்றாகும். இலங்கை உலகில் தேயிலை ஏற்றுமதியில் மூன்றாவது நாடாக இருப்பதற்கு உங்களுடைய கடின உழைப்பே காரணம். உலகம் எங்கும் வெற்றிநடை போட்டு பரந்து வளர்ந்து வருகின்ற இலங்கை தேயிலை தொழில்துறையின் இண்றிமையாத முதுகெழும்பாக திகழ்பார்கள் நீங்கள். உங்களுடைய கடின உழைப்பை நான் பாராட்டுகின்றேன்.

உங்களுக்கும், எனக்கும் இடையே ஒரு பொதுவான ஒற்றுமை இருக்கிறது, தேயிலைக்கும், எனக்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு என்பதை உங்களில் பலர் கேள்வி பட்டு இருக்கலாம். தேநீருடனான கலந்துரையாடல் என்பது ஒரு சுலோகம் மட்டும் கிடையாது. மாறாக உண்மையான உழைப்பின் மிதான ஆழ்ந்த மரியாதை குறிக்கிறது. இன்று நாம் உங்களுடைய முன்னோர்களை நினைவு கூறுகிறோம், அவர்கள் வலுவான மனோ தைரியத்துடன் தங்கள் வாழ்க்கை பயனத்தை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேற்கொண்டார்கள். அந்த கடினமான பயணத்தில் அவர்கள் பல்வேறு இன்னல்கள் மற்றும் போராட்டங்களை சந்திக்க நேரிட்டது. அவர்கள் அந்த பயணத்தை ஒருபோதும் கைவிடவில்லை. இன்று அவர்களுடைய மனோ தைரியத்திற்கு தலை வணங்குகின்றேன்.

நண்பர்களே இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு தமிழ் அறிஞர் யாரும் ஊரே யாவரும் கேளிர் என பறைசாற்றினார்.  அந்த வார்த்தனையின் உண்மையான அர்த்தத்தை நீங்க பிரதிபலிக்கிறீர்கள். இலங்கையை உங்களுடைய வீடாக்கி கொண்டீர்கள். இலங்கை தேசத்தின் பிரிக்க முடியாதவர்களாகிவிட்டீர்கள். நீங்கள் அனைவரும் தமிழ்த் தாயின் பிள்ளைகள். உலகில், வாழும் மொழிகளில் மிகவும் பழமையான பாரம்பரியமும் கொண்ட செம்மொழியான தமிழ் மொழியை பேசுகிறீர்கள். அதோடு சிங்களத்தையும் பேசுகிறீர்கள் என்பது பெருமைக்குரியாதாகும்.

மொழி என்பது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் கருவி மட்டுமல்ல, அது கலாசாரத்தை வரையறுக்கிறது. சமூகங்களை சேர்க்கிறது. ஒரு சமூகத்தின் வேறுபாடுகள் கொண்டாட்டங்களுக்கு வழிகோல வேண்டுமே தவிர, முரண்பாடுகளுக்கு வித்திடக்கூடாது.

நண்பர்களே நீங்கள் இன்றும் இந்தியா உடனான உறவை தக்கவைத்து உள்ளீர்கள், உங்கள் சொந்தங்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இந்திய பண்டிகைகளை உங்கள் பண்டிகையாக கொண்டாடுகிறீர்கள். என்றும் இந்தியப்  பிரதமர்; நNரெந்திர மோடி டிக்கோயாவில்   உரையாற்றிய போது  குறிப்பிட்டார்.

Related posts

அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட மூவர் சந்தேகநபர்கள்

Three Avant-Garde suspects before Court today

அரசியல் யாப்பு குழு அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக பேச்சுவார்த்தை – பிரதமர்