உள்நாடு

மல்வத்து அஸ்கிரி பீடாதிபதியின் விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் மக்கள் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத தலைவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் எனவும் மல்வத்து அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கோட்டை அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்வத்து அஸ்கிரிய பீடாதிபதிகளை தரிசிக்க வந்த போதே உயர்பீடத்தலைவர்கள் இதனை வலியுறுத்தினர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வண.உலப்பனே சுமங்கல தேரர்;

“இப்போது நிலைமை மாறி வருகிறது. மீண்டும், ராஜபக்சக்கள் கீழ்த்தரமான தந்திரோபாயங்களைப் பிரயோகித்து, பசில் ராஜபக்ஷவின் கீழ்த்தரமான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.

எனவே, பசில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஏனைய மோசடியாளர்களுக்கு நாம் கூறுகின்றோம். வலுக்கட்டாயமாகப் பிரதமர் பதவியைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் சொல்கிறோம், 9ஆம் திகதி புயல் வந்து 13ஆம் திகதி சுனாமி வரப் போகிறது என்பதை தெளிவாக நினைவில் கொள்ளுங்கள். ”

Related posts

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில்!

மு.கா.வின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அநுரவுக்கு ஆதரவு.

editor

அஸ்வெசும நலன்புரி திட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம் வழங்க தீர்மானம்

editor