(UTV | ஜப்பான்-நாரா) – ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இனந்தெரியாத ஒருவரால் சுடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு நகரமான நாராவில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாகவும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.