உள்நாடு

வெளிநாட்டு தொழில்களில் இருந்து பணம் அனுப்புபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்

(UTV | கொழும்பு) – புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மின்சார வாகன இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அந்த பணியாளர்கள் அனுப்பும் டொலர் தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு எவ்வாறான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக இந்த சலுகை அமுல்படுத்தப்படும் என்றும் அதே பேச்சாளர் குறிப்பிட்டார்.

சட்ட ரீதியாக பணம் அனுப்பும் அனைவருக்கும் இந்த வேலைத்திட்டம் இன்றும் நாளையும் அமுல்படுத்தப்பட வேண்டுமென தொழிலாளர் அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

மே. 9 எரிக்கப்பட்ட பஸ்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!

பணிப்பாளராக சாணக்கியன் , அமைச்சராக சுமந்திரன் ; கம்மன்பில காட்டம்!