(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்ற விசாரணை பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சம்பவத்துக்கு உதவி வழங்கிய சிலரைக் கைதுசெய்வதற்கான விசாரணை நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு உந்துருளி, தெல்கொட பிரதேசத்திலுள்ள உந்துருளி விற்பனை நிலையமொன்றில், சம்பவம் இடம்பெறுவதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, பிலியந்தலையில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐந்து பேர் தொடர்ந்து சிகிக்சை பெற்று வருகின்றனர்.