உள்நாடு

இந்தியாவில் இருந்து எரிபொருள் கொண்டு வர பசிலினால் விசேட குழு

(UTV | கொழும்பு) –  இந்திய கடனுதவியின் கீழ் அதிக எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அந்த வசதிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்காலத்திலும் தொடரும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையகத்தில் அண்மையில் பசில் ராஜபக்சவுக்கும் பொதுஜன முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இந்தியாவிடமிருந்து மேலதிக சலுகைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க பசில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் பசில் ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் பல நடைபெற உள்ளதாகவும், இதுவரை இந்த நாட்டிற்கு வந்துள்ள அனைத்து எரிபொருள் கப்பல்களும் பெறப்பட்ட கடன் உதவியின் கீழ் வந்துள்ளதாகவும் இந்திக அனுருத்த மேலும் தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்த போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

  • ஞாயிறு – மவ்பிம செய்தித்தாள் , தமிழில் – ஆர்.ரிஷ்மா

Related posts

மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு

இலங்கை அரசுக்கு மியன்மார் வேண்டுகோள்

இலங்கை ஒரு முன்மாதிரியான மாற்றத்திற்குள் பிரவேசிக்கிறது – ஜனாதிபதி