வகைப்படுத்தப்படாத

பிரதமர் மோடியின் உலங்கு வானூர்தி காரணமாக ஹட்டனில் 3 வீடுகள் கடும் சேதம்!

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி காரணமாக ஹட்டன் பிரதேசத்தின் மூன்று வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது , காயமடைந்த பெண்ணொருவர் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தியில் ஹட்டன் டன்பார் மைதானத்திற்கு மோடி வருகை தந்த நிலையில், உலங்கு வானூர்தி தரையிறங்கிய போது இவ்வாறு குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதற்கு சிலதினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் முன்னோட்ட பயிற்சியின் போதும் சிலவீடுகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனவரி முதல் சந்தையில் பொலிதீன் பேக் தட்டுப்பாடு

Cabinet papers to review Madrasas & MMDA

புயலுடன் கூடிய மழையால் 27 பேர் உயிரிழப்பு…