உள்நாடு

பிரதமருக்கும் சிபெட்கோ விநியோகஸ்தர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – இலங்கை கனிய எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று (01) கொழும்பில் எரிபொருள் தொடர்பான நெருக்கடி நிலை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 90% மூடப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 10% அத்தியாவசிய சேவைகளுக்காக தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் இருப்புக்களை விடுவிக்க திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்புலத்தில் இலங்கை கனிய எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கம் நேற்றைய கலந்துரையாடலில் பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் இணைந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, எதிர்வரும் 15ஆம் அல்லது 16ஆம் திகதி எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 29,882 பேர் பூரணமாக குணம்

இதுவரை 2,889 பேர் பூரண குணம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல்