(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடிகள் மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்டவை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(01) காலை இடம்பெற்றுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, புதிய நிலக்கரி கொள்கை இல்லை, நிலையான எரிபொருள் விநியோகத்திற்கான திட்டங்கள், சுற்றுலாவிற்கு எரிபொருள் வழங்கல், மின்சாரம் மற்றும் எரிசக்திக்கான சீர்திருத்தங்களுக்கு இங்கிலாந்தின் உதவி ஆகியவை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.
Discussed and briefed on the plans for Energy crisis with @SarahHultonFCDO, British High Commisioner in SL this morning. Renewable Energy, No new Coal policy, plans for steady fuel supply, fuel supply for tourism, assistance from UK for reforms for Power & Energy was discussed. pic.twitter.com/9Tmh2EH2TI
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 1, 2022