உள்நாடு

உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) –   எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் போன்றவற்றின் தாக்கம் இருந்தாலும், உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா, மொத்த வியாபாரிகளுக்கு தற்போது ஒரு லீட்டர் தேங்காய் எண்ணெய் ரூபா 550க்கு வழங்கப்படுகிறது.

நுகர்வோரை பாதுகாப்பதற்காக தொழில்துறையில் பல சவால்கள் ஏற்பட்ட போதிலும் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விலைகள் நிலையானதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சில இடைத்தரகர்கள் மற்றும் வணிகர்கள் அதிக விலைக்கு தேங்காய் எண்ணெயை விற்பனை செய்து நுகர்வோரை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை எச்சரித்த டி சில்வா, நம்பிக்கையான வர்த்தகர்களிடம் இருந்து தேங்காய் எண்ணெயை பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

“IMF பணம் கிடைக்கும் திகதியில் இன்னும் நிச்சயமில்லை”

மியன்மார் இராணுவ ஆட்சியுடன் இலங்கை – வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகள் [VIDEO]

வட மேல் மாகாண அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் பூட்டு