உள்நாடு

இன்று 26க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) –   எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க முடியாமையினால் நேற்று (ஜூன் 29) காலை முதல் நகரங்களுக்கிடையிலான, தொலைதூர சேவைகள் மற்றும் அலுவலக ரயில்கள் என 26க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளை இரத்து செய்ய ரயில்வே அதிகாரசபைக்கு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

புகையிரத திணைக்களத்தின் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள நிலைய அதிபர்கள், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்களுடனான பிரச்சினை காரணமாகவே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வாதுவவிற்கு இரண்டு ரயில்கள், கொழும்பிலிருந்து பாணந்துறைக்கு இரண்டு ரயில்கள், கொழும்பிலிருந்து ரம்புக்கனைக்கு ஆறு ரயில்கள், கொழும்பிலிருந்து மீரிகம வரை இரண்டு ரயில்கள், கொழும்பு மற்றும் வெயங்கொட இடையே இரண்டு ரயில்கள், கொழும்பு மற்றும் அம்பேபுஸ்ஸ இடையே இரண்டு ரயில்கள், கொழும்பு மற்றும் சிலாபம் இடையே இரண்டு ரயில்கள். கொழும்புக்கும் மாதம்ப இற்கும் இடையில் பயணிக்கும் இரண்டு ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் உதயாதேவி புகையிரதம் மற்றும் கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரை முன்னர் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை – அவிசாவளை பயணிகள் மற்றும் பொதிகளை எடுத்துச் செல்லும் புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக அவிசாவளை வரையிலான மருதானை ரயில் நிலையத்தில் 300 க்கும் மேற்பட்ட பொதிகள் குவிந்துள்ளன.

எரிபொருள் நெருக்கடி காரணமாக பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டு அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டது.

Related posts

கொரோனா : தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு

அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு விடுதலை

HNDA மாணவர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்