(UTV | அமெரிக்கா) – ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு படகை அமெரிக்கா சிறை வைத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் மெக்சிகோவில் இருந்து பிஜி நாட்டிற்கு வந்த 350 அடி நீளமுள்ள சொகுசு படகு ஒன்றை அந்நாட்டின் துறைமுகத்தில் சிறைபிடிக்கப்பட்டது.
ஆனால் அந்த படகை பராமரிக்க முடியாது என்பதால் அந்நாட்டு நீதிமன்றம் அனுப்பிவிட உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த படகு அமெரிக்கா கொண்டுவரப்பட்டு அமெரிக்காவில் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு படகை அமெரிக்கா சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.