உள்நாடு

இ.போ.ச. பேரூந்து சேவைகள் மந்தமாகிறது

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளுக்கு தேவையான டயர்கள் மற்றும் பேட்டரிகள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவை தடைபடும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.

எனவே, தற்போதைய நெருக்கடி நிலை தொடருமானால், இலங்கை போக்குவரத்து சபை பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குறித்த சங்கத்தின் தலைவர் சேபால லியனகே நமது செய்திச் சேவைக்கு தெரிவிக்கையில்; பேருந்துகளுக்கான உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தால், ஏறக்குறைய 1,000 பேருந்துகள் சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

பொது போக்குவரத்தை இயக்குவதற்கு தேவையான உதிரி பாகங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை மோசமான பொருளாதார நிலையில் இருப்பதாக லியனகே கருத்து தெரிவித்தார்.

எனவே, பொருளாதார மந்தநிலையின் போது பொதுப் போக்குவரத்து பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் எரிபொருள் நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Related posts

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு