உள்நாடு

படகு மூலம் ஆஸி செல்ல முயன்ற 47 பேர் கடற்படையினரால் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த ஜூன் 27ஆம் திகதி இரவு நீர்கொழும்பு மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 47 பேருடன் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கையினை கடக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் இலங்கையின் பல நாள் மீன்பிடி கப்பலை கடற்படையினர் கைப்பற்றினர்.

இலங்கை கடற்படையின் நந்திமித்ரா கப்பல் கடந்த ஜூன் 27 ஆம் திகதி இரவு நீர்கொழும்பு மேற்கு கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடி கப்பலை சோதனையிட்டது.

பல நாள் மீன்பிடிக் கப்பலில் 34 ஆண்கள், 6 பெண்கள், 7 குழந்தைகள் மற்றும் 5 பேர் இலங்கையிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ, நாத்தாண்டிய, சிலாபம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என  சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்படும் இத்தகைய சட்டவிரோத குடியேறிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆதரவளிப்பதில்லை. துரித கதியில் பணம் சம்பாதிப்பதற்காக அப்பாவிகளை தவறாக வழிநடத்தும் கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ள முயற்சிப்பதன் மூலம் பொதுமக்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்படும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

Related posts

26ஆம் திகதி சுகயீன விடுமுறை: இலங்கை ஆசிரியர் சங்கம்

சீரற்ற காலநிலை : மலையக ரயில் சேவையில் பாதிப்பு

கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் வருமானம்