உள்நாடு

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு : அமைச்சரவைப் பத்திரம் இன்று

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு தமது தாய் நிறுவனங்களிடம் கடன் பெற்று எரிபொருளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணி சுமை ஏற்படக் கூடாது என்றார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 200 நிரப்பு நிலையங்களை அந்த நிறுவனங்களுக்கு வழங்கினால் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் மேலும் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுமாறு இலங்கை ஐஓசி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

திசைகாட்டியால் பரிந்துரைக்கப்படும் சபாநாயகர் மீதும் நம்பிக்கை இல்லை – எதிர்க்கட்சியிலிருந்து பெயரினை முன்மொழிய உள்ளோம் – நளின் பண்டார எம்.பி

editor

“இந்தியாவில் கைதான ஐ.எஸ் நபர்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்” நாட்டாமை ஒருவர் தொடர்பாம்!

வௌிநாடுகளிலிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்