உள்நாடு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் வாகன சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

கொள்கலன் கட்டணங்கள் இன்று (ஜூன் 27) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, குறித்த கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.

“அரசாங்கத்தின் எரிபொருள் விலை அதிகரிப்புடன் டீசல் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்துத் துறையை நிலைநிறுத்துவதற்கு இந்த எரிபொருள் விலையை நாம் வசூலிக்க வேண்டும்.

குறிப்பாக எங்களுடைய உதிரி பாகங்களின் டயர் பேட்டரிகளின் விலை உயர்ந்துள்ளது ஆனால் இந்த நேரத்தில் அந்த பணத்தை எங்களால் பெறமுடியவில்லை எனவே இந்த நேரத்தில் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாவதால் எரிபொருள் செலவை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அதனால்தான் இதை 10% அதிகரிக்க முடிவு செய்தோம்..”

Related posts

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

தொடர்ந்தும் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசபந்து தென்னகோனை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற பணிப்பு