உள்நாடு

நாளை முதல் எரிபொருள் வழங்க டோக்கன் முறை

(UTV | கொழும்பு) – தற்போதைய எரிபொருள் நெருக்கடியானது நிதி நிலைமை சீராகும் வரை சுமார் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு தரப்பினரின் தலையீட்டில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த டோக்கன் அட்டை, குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் அடுத்த கப்பல் வரும் வரை மட்டுப்படுத்தப்படும்.

எதிர்வரும் சில நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் டோக்கன் பெற்று வீடுகளுக்கு செல்லுமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

சஜித்தை ஜனாதிபதியாக்குவதை ரணிலால் தடுக்க முடியாது – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் – மனிதாபிமான ரீதியாக கூறுகிறேன் – ரணில் விக்ரமசிங்க

editor