உள்நாடு

“பெட்ரோல் வரிசைகளில் நிற்க வேண்டாம்”

(UTV | கொழும்பு) – பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்த வாரத்தின் முற்பகுதியிலும் அடுத்த வாரத்திலும் வரும் என உறுதி செய்த விநியோகஸ்தர்கள் வங்கி மற்றும் விநியோக காரணங்களால் குறித்த நேரத்திற்கு வரமுடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அடுத்த எரிபொருள் கப்பல் வந்து அங்கு தரையிறங்கும் வரை மீதமுள்ள சரக்குகள் பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழில்துறைக்கு முன்னுரிமையுடன் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்தார்.

டீசல் மற்றும் பெட்ரோல் இருப்புக்கள் அடுத்த வாரத்தில் வரையறுக்கப்பட்ட இடங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தாங்கி வரும் திகதியை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், அடுத்த கச்சா எண்ணெய் கப்பல் வரும் வரை சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொரோனா : மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ளவற்றை மீள பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor