உள்நாடு

‘எரிபொருள் கப்பல் வரும் திகதியினை எம்மால் உறுதி செய்ய முடியாதுள்ளது’

(UTV | கொழும்பு) – வங்கி நடவடிக்கைகள் மற்றும் விநியோக பிரச்சினைகள் காரணமாக எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வரும் திகதிகளை அறிவிக்க முடியாதுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த எரிபொருள் கப்பல்கள் இலங்கை துறைமுகங்களை வந்தடையும், தரையிறங்குவதற்கு முன்னர் எரிபொருள் விநியோகம் தொடரும், பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் அடுத்த வாரம் முழுவதும் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வரைபு சமர்ப்பித்து!

இலங்கை மின்சார சபைக்கு 6 புதிய புதுப்பிக்கத்தக்க திட்டங்கள்!

இன்றும் மழை