(UTV | கொழும்பு) – நாட்டில் தனியார் வேலைவாய்ப்பை தொடர்வதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம். பி. கே. மாயாதுன்ன அவர்கள் தெரிவிக்கையில், ஐந்தாண்டு கால ஊதியமில்லாத விடுப்பில் அரசு ஊழியர்கள் தனியார் துறையிலோ அல்லது வேறு வேலையிலோ பணிபுரிய அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், நியமிக்கப்பட்ட குறித்த குழுவில் 7 பேர் உள்ளனர். இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.